Sunday, 29 December 2013

தாயுமானவன் என் தந்தை...!




எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்...

பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்...

பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்...

இருபத்திரண்டுவயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்...

இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்...

எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்...

எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்...

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது. என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி தியாகம் செய்த தாயுமானவன் என் தந்தை...!

0 comments:

Post a Comment