Wednesday, 27 November 2013

நாகரிகம், அநாகரிகம் ஆநாகரிகம்!

 

"நம் திரைப் படங்களிலும் தொலைக்காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் பின்பக்கத்தில் உதைப்பது, கஷ்கத்தைச் சொறிவது, ஒருவர்மேல் ஒருவர் துப்பிக் கொள்வது போன்ற அநாகரிகமான காட்சிகள் இப்போது மலிந்து வருகின்றன. எமிலிபோஸ்ட் மாதிரி பொதுவாழ்வில் நாகரிக நடைமுறைக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன
பொது வாழ்வில் நடத்தையை நாகரிகம், அநாகரிகம், ஆநாகரிகம் என மூன்று வகையாகப் பிரித்துக் குறிப்பிட்டிருக்கிறார்


உதாரணம்: 1.பொது இடத்தில் மூக்கை, காதை, பல்லை நோண்டாமல் இருப்பது நாகரிகம். நோண்டுவது அநாகரிகம். நோண்டுவது மட்டுமின்றி, விளைவை உருட்டி ஆராய்வது ஆநாகரிகம்!

2.புருவம், காது, மூக்கு உரோமங்களைச் சீராக வெட்டி வைத்திருப்பது நாகரிகம். வெட்டாமல், காடாக வளர்ப்பது அநாகரிகம். அவற்றை நீளமாக வளர்த்து, சீப்புப் போட்டு வாரிப் பின்னுவது ஆநாகரிகம்.

3.என்னதான் ஜலதோஷமாக இருந்தா லும், பொது இடங்களில் தும்மாமல், சிந்தாமல் கைக்குட்டையில் Ôஸ்க்Õகுவது நாகரிகம். மூக்கில் புல்லாக்கு போல் தொங்கவிடுவது அநாகரிகம். ‘ஹளார்Õ என்று 120 டெஸிபலில் தும்மி, ஜெட் வேகத்தில் பக்கத்தில் இருப்பவர் சட்டையில் சொல்லாமல் துடைத்து விடுவது ஆநாகரிகம்.

4.ஹெர்னியா போன்ற ஆபரேஷன் பற்றிப் பேசாமல் இருப்பது நாகரிகம். ஆபரேஷன் தழும்பைக் காட்டுவது அநாகரிகம். ஆபரேஷனில் நீக்கிய பாகத்தை ஜாடியில் வைத்திருந்து காட்டுவது ஆநாகரிகம்.

5.சுத்தமான சட்டை அணிவது நாகரிகம். கைக்குக் கீழ் வியர்வைக் கறை தெரிய, சட்டை அணிவது அநாகரிகம். அந்த வியர்வையை மற்றவர் எதிரில் பிழிவது ஆநாகரிகம்.

6.ஆபீஸில்... தூங்காமல் இருப்பது நாகரிகம். குறட்டைவிட்டுத் தூங்குவது அநாகரிகம். குறட்டையுடன் ஜொள்ளு விடுவது ஆநாகரிகம்.

7.அடக்கி வைத் திருந்து, வீட்டுக்குப் போய் சிறுநீர் கழிப்பது நாகரிகம். தெருவில் சுவர்மேல் சிறுநீர் கழிப்பது அநாகரிகம். அதில் டிசைன் போடுவது ஆநாகரிகம்.


8.விருந்தில், சாப்பாட்டில் தலைமுடி இருந்தால், பார்க்காமல் நீக்குவது நாகரிகம். எல்லோரும் பார்க்க, அதை எடுத்துப் போடுவது அநாகரிகம். அந்த ரோமம் யாருடையது என்று பெண்களிடம் விசாரிப்பது ஆநாகரிகம்.

9.அடிபட்ட புண் தெரியாமல் உடை அணிவது நாகரிகம். அடிபட்ட புண்ணைக் காட்டுவது அநாகரிகம். அதை வரக் வரக்கென்று சொரிவது ஆநாகரிகம்.

10.சாப்பிடும்போது பேசாமல் இருப்பது நாகரிகம். வாய் நிறைய போண்டா சாப்பிட்டுக்கொண்டே பேசுவது அநாகரிகம். பாதி சாப்பிட்ட போண்டாவை எடுத்து, சற்று நேரம் கையில் வைத்துக்கொண்டு பேசுவது ஆநாகரிகம்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நாகரிகம். சுட்டிக்காட்டுவது அநாகரிகம். படம் போட்டுக் காட்டுவது ஆநாகரிகம்!

0 comments:

Post a Comment