Friday, 25 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-03


                    இந்தியாவில் மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பித்த காலத்தை பற்றி எழுத்து வடிவிலான சான்றுகள் ஏதும் இல்லை. கல்வெட்டுக்களோ, குறிப்புக்களோ எழுதும் பழக்கமும் இல்லாமல் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கொண்டு ஓரளவுக்கு வரலாற்றை படைத்துள்ளனர் தொல்லியல் நிபுணர்கள். இந்தியாவில் சொல்லிகொல்லும்படியாக முதன் முதலில் தோன்றியது சிந்துசமவெளி நாகரிகம். உலகில் முதன் முதலில் தோன்றியதாக கருதப்படும் மெசபடோமியா மற்றும் எகிப்திய கலாசாரத்திற்கு இணையானது நமது சிந்து சமவெளி நாகரிகம். ஆனால் மேசபடோமியர்கள் போல் சிந்து சமவெளி நாகரிகத்தினர் வரலாற்றுக்கு எந்த ஒரு எச்சங்களையும் விட்டு செல்லவில்லை. இதுவே நமது சிந்து சமவெளி நாகரிகம் உலக அளவில் பெருமையாக பேச படைத்ததற்கு ஒரு காரணம் ஆகும். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தய வரலாற்றை பார்த்தால் அதில் கர்காலமும், உலோக காலமும் அடங்கும். கற்கால மனிதர்களும் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர் அதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி பார்ப்பதற்கு முன்பு கற்கால மனிதர்கள் பற்றி பார்ப்போம்.
கற்கால மனிதர்களின் வரலாற்றை நான்கு வகையாக பிரிக்கின்றனர்:
1.பழைய கற்காலம்(கி.மு10,000 முன்பு)
2.இடை கற்காலம்(கி.மு10,000- கி.மு6000)
3.புதிய கற்காலம்(கி.மு6000- கி.மு4000)
4.உலோக காலம்
       பள்ளி பருவத்திலிருந்தே வரலாற்றில் இவை பற்றி நிறைய படித்திருக்கிறோம். இருப்பினும் இதுவரை நாம் அறியாத சில தகவல்களுடன் இக்காலகட்டங்களை விரிவாக பார்ப்போம். இன்றைய நாகரீக வளர்ச்சியின் அடித்தளம் அமைக்கப்பட்டது கற்காலத்தில் தான்.முக்கியமாக செய்ய வேண்டியவை எவை செய்ய கூடாதவை எவை என்ற பகுத்தறிவை மனிதன் பெற்றான்.

பழைய கற்காலம்(palaeolithic or old stone age):

             பழைய கற்கால மனிதர்களின் வரலாறு 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தோன்றுகிறது. பழைய கற்கால மனிதர்களை உணவுகளை சேகரிப்போர் என வரலாற்று ஆசிரியர்கள் அழைக்கின்றனர். குரங்குகளை போல பல வகையான் மனித வகையினர் இக்கால கட்டத்தில் வாழ்ந்தனர். மனிதன் கல்லால் ஆன ஆயுதங்களை கண்டுபிடித்தான். குவார்ட்ஸ் போன்ற கடுமையான கற்களை கொண்டு கூர்மையான ஆயுதங்களை செய்து விலங்குகளை வேட்டையாடினர். மாமிசம் பழங்கள் தானியங்கள் இவர்களின்                     முக்கிய உணவாக இருந்தது. மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடிய விலங்குகளை நெருப்பில் இட்டு உண்டான் மேலும் இரவு நேரங்களில் குளிரில் இருந்து  தன்னை காத்துக்கொள்ளவும் நெருப்பை பயன்படுத்தினான்.
 இக்காலகட்டத்தில் சில இடங்களில் நியாண்டர்தால் வகை மனிதர்களும், ஹோமோசபியன்(நாம்) மனிதர்களும் இணைந்தும், சில இடங்களில் தனித்தனியாகவும் வாழ்ந்துள்ளனர். கற்கால மனிதர்கள் எந்த மொழியையும் பயன்படுத்தவில்லை மேலும் தகவல் பரிமாற்றம் தொடர்பான விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

மத்தியபிரதேஷ மாநிலம் bhimbetka என்ற இடத்தில கற்கால மனிதர்களின் 30,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித நடமாட்டம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. முந்தய பதிவில் பார்த்த மனித இனங்களில் ஒன்றான homo erectus வகை மனிதர்களின் ஓவியம் அவை.

இடை கற்காலம்(Mesolithic or middle stone age):
                    மனித நாகரிகத்தின் அடுத்த கட்ட முனேற்றம் இடை கற்காலம் ஆகும். இடை கற்காலம் கி மு 10,000 இல் இருந்து கி.மு 6,000 வரை உள்ள காலம். இக்காலாகட்டதில் நாடோடிகலாக  திரிந்த மனிதர்கள் குழுக்களாக இணைந்து வசதியான ஓரிடத்தில் வாழ தொடங்கினர். கல் ஆயுதங்களையே பயன்படுத்தினர்.
 நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ் போன்ற பல வகையான மனித இனங்கள் படிப்படியாக அழிந்தது இக்காலகட்டத்தில் தான். இடை கற்காலத்திலும் மனிதர்களின் மொழி பற்றி சான்றுகள் ஏதும் இல்லை.  இடை கற்கால எச்சங்கள் குஜராத்தில் Langhanj, மத்திய பிரதேசத்தில் Adamgarh, ராஜஸ்தான், பீகார் போன்ற பகுதிகளில்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதிய கற்காலம்(Neolithic or new stone age):
                       கற்காலத்தின் கடைசி காலம் புதிய கற்காலம் ஆகும். புதிய கற்காலம் கி.மு 6,000 இல் இருந்து கி.மு 4,000 வரை உள்ள காலம் ஆகும். மனித நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க முனேற்றம் நடைபெற்றது இக்காலகட்டத்தில் தான். இகாலகட்டதில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தனர். விவசாயம் செய்தனர். மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் பல பகுதிகளில் இக்காலத்திற்கான சான்றுகள் கிடைக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, பீகாரில் siraant, உத்திர பிரதேசத்தில் பிளான் சமவெளி, தென்இந்தியாவில் கர்நாடகத்தில் Maski, Brahmagiri, Hallur
மற்றும் Kodekal. தமிழ்நாட்டில் payyampalli, ஆந்திரபிரதேசத்தில் utnoor போன்ற பகுதிகளில் புதிய கற்காலத்திற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

கல் ஆயுதங்களை பயன்படுத்தி வந்த மனிதன் உலோகங்களை கண்டெடுத்தான் பின்பு அவற்றை உருக்கி உலோகத்தினாலான கருவிகளை செய்தான். படிப்படியாக கல் ஆயுதங்களுக்கு விடை கொடுத்து உலோகத்தினாலான ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தான். இது உலோக காலம் ஆகும். கற்காலத்தை தொடர்ந்து வருவது உலோக காலம் ஆகும். உலோக காலத்தை பற்றியும் மனிதர்களின் அடுத்தடுத்த வளர்சிகள் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment