Saturday, 18 May 2013

நீங்கள் ஒரு கல்லூரி மாணவர் எனில் கட்டாயம் பார்க்க வேண்டிய இணையதளம் இது.






                          இணையத்தில்பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்குப் பயன்படும் இணையதளங்கள் இருப்பதைப் போன்று கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கென தனிச் சிறப்பு இணையதளங்கள் நிறைய இருப்பதில்லை. ஒன்றிரண்டு தளங்கள் இருப்பினும் அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமான ஒன்றாகவே உள்ளது

  

                         காரணம் அவர்கள் தேடும் குறிச்சொற்களுக்கேற்ற  (Keywords)  சரியான இணையதளங்கள் கிடைப்பதில்லை. தேடும் வார்த்தைகளுக்கு ஏற்ப சரியான இணையதளங்களை பட்டியலிடாததே அதற்கு காரணம்.  அதாவது கல்வித் தொடர்பான வார்த்தைகளை உள்ளிட்டு தேடும்பொழுது அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் கொண்டிருக்கும் வேறொரு  அதிக டிராபிக் கொண்ட தளங்களையே முதன்மைப் படுத்திக் காட்டும்.




               அதனால் மாணவர்கள் தேடும் குறிச்சொற்களுக்கான சரியான கல்வி இணையதளங்கள் பட்டியலிடப்படுவதில்லை. இதற்கு காரணம் கல்வித்தொடர்புடைய இணையதளங்கள் மிகவும் குறைவாக இருப்பதே


                 அப்படி குறைவான உள்ள இணையதளங்களிலும் மிக முக்கியமான இணையதளமாகவும், கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் பயன்படக்கூடிய  ஒரு மிகச் சிறந்த முழுமையான இணையதளத்தை இப்பதிவில் பார்க்கலாம்.




தளத்தின் பெயர்ஸ்டூடண்ட்ஸ் 3கே (Students 3k.com)




        இத்தளத்தில் Engineering Students, Arts & Science Students, Polytechnic Students, MBA Students, B.Ed & M.Ed Students மற்றும் HSC (12th) Students ஆகியவர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும்
  




Engineering Students:



      Engineering Students க்குத் தேவையான  Questions, Notes  ஆகியவைகள் கிடைக்கும். இன்ஜினியர் மாணவர்கள்



என்ற தொடுப்பை சொடுக்கித் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.



Arts & Science Students:




          Arts & Science Students  களுக்கான தளம் இது. இதில் ஆர்ட்& சயின்ஸ்  Study Meterials,  Question Papers  முதல் அனைத்து Questions Bank ம் கிடைக்கும்




              இவ்வாறு அனைத்து துறை கல்லூரி மாணவர்களுக்கும் தேவையான தகவல்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்திருக்கிறார்கள்




           குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் Aptitude  பகுதியை சொல்லலாம். அது மட்டுமில்லாமல்  Placement Papers,  Projects download,  Career Guidance  ஆகிய தலைப்புகளில் அடங்கியுள்ள தகவல்களும் மிக்க பயனுள்ளதாக இருக்கும்




           கல்விக் கடன்  (Educational Loan) வாங்குவதற்கான வழிமுறைகளையும் இத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ல்விக் கடன் வழங்கும் வங்கிகளையும் இத்தளத்தில் பட்டியலிட்டுள்ளனர். பட்டியலிலிருக்கும் ஒரு சில வங்கிகள்



  • Axis Bank Study Loan
  • Citibank India
  • Syndicate Bank
  • Tamilnad Mercantile Bank
  • UCO Bank Education Loan
  • [CUB] City Union Bank
  • Federal Bank
  • State Bank of Mysore
  • State Bank of Hyderabad [SBH]
  • Indian Bank Loan
  • Punjab National Bank [PNB]
  • HDFC Bank Loan
  • Dena Bank
  • Central Bank of India
  • Bank Of India
  • Bank of Baroda [BOB]
  • Allahabad bank



               ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும், அவர் எந்த துறையைச் சார்ந்தவராக இருப்பினும் அவர்கள் துறைச்சார்ந்த அனைத்து முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது இத்தளம். அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் விதத்தில் கல்விச்சார்ந்த தகவல்களையும், கல்விக்குப் பயன்படும் தகவல்களையும் தொகுத்து தந்திருப்பது பாராட்டத்தக்கதாகும்




நீங்கள் ஒரு கல்லூரி மாணவர் எனில் கட்டாயம் பார்க்க வேண்டிய இணையதளம் இது


இணையதளத்திற்கான முகவரிhttp://students3k.com/

0 comments:

Post a Comment