Wednesday, 22 May 2013

தரம் நிறைந்த குறைந்த விலையில்( ரூ.10,000 ) - " 3D ஸ்மார்ட் போன் " வந்தாச்சு!




3 m - Tec - phone
             


                         பொதுவாக சாம்சங், ஆப்பிள்,  எச்.டி.சி.  போன்ற பல்வேறு மிகப் பெரிய நிறுவனங்கள் எக்கச்சக்க விலையில் ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருவது தெரிந்த விஷ்யம்தான்.   அதே சமயம் சில சின்ன நிறுவனங்கள் இது போன்ற படாபடா பிராண்டிங்களின் ஸ்மார்ட் போனுக்கு இணையான சாதனங்களை குறைந்த விலையில் தயாரித்து வருவது தெரியுமா?.


அந்த லிஸ்டில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக மைக்ரோமெக்சை சொல்லலாம். 



                         குறிப்பாக இந்த மைக்ரோமெக்சின் கென்வாஸ் வரிசை ஸ்மார்ட் போன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்கள் வழங்கக் கூடிய அத்தனை வசதியையும் இவையும் வழங்குகின்றன. மேலும் இவற்றின் விலையும் ரொம்ப குறைவானதாகும்.


                        
                            அத்துடன் ஆங்காங்கே சர்வீஸ் செண்டர் வைத்திருப்பதால் இந்த பிராண்டை நம்பி வாங்குபவர்கள் அதிகமாம். பெரும்பாலும் மைக்ரோமெக்ஸ் இந்த ‘விலை குறைவு – தரம் அதிகம்’ (Less Pay – Get More) உத்தியைக் கையாண்டு சந்தையில் குறிப்பிடக்க அளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றே சொல்லல்லாம். அப்பேர் பட்ட கம்பெனி தற்போது வழக்கம் போல் குறைந்த விலையில் முப்பரிமாண ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.




                      இதற்கு   Micromax A115 Canvas 3D  என பெயரிடப்பட்டுள்ளது.









                     இதில் முப்பரிமாண திரை மட்டுமன்றி 1 GHz டுவல் கோர் புரசசர், 512 எம்.பி. ரெம் மற்றும் 5 மெகாபிக்ஸல் காமராவினையும் இது கொண்டுள்ளது. இது மட்டுமன்றி அண்ட்ரோய்ட் 4.1.2 ஜெலி பீன் மூலம் இது இயங்குவதுடன் டுவல் சிம் வசதியையும் கொண்டுள்ளது. 




இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனின் விலை இந்திய நாணயப்படி ஜஸ்ட் 10 ஆயிரம் ரூபாயாதான்!.

0 comments:

Post a Comment