Sunday, 13 October 2013

நாமக்கல் மாவட்டத்தின் வரலாறு!



ஒரு பக்கம் கோட்டை, இன்னொரு பக்கம் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேட்டை. நடுவில் உயர்ந்து நிற்கும் நாமகிரிமலை. 


இதுதான் நாமக்கல் கிழக்கே கோட்டையும் மேற்கே பேட்டையுமாகப் பிரிந்து கிடக்கும் இந்த நகரம் தற்போது கோழிப்பண்ணைகளுக்குப் பெயர் போனதாக உள்ளது. ஆனால் இயற்கை எழிலும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது. 


நாமக்கல்லைச் சுற்றியுள்ள ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வட்டங்களைச் சேர்த்து கடந்த 1.1.97 முதல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய நாமக்கல் மாவட்டம் முன்பு சேலம் மாவட்டத்துடன்  இணைந்திருந்தது.


'நாமகிரி' என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர்  'ஆரைக்கல்' என்பதாகும்.



 இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது ராமச்சந்திர நாயக்கர் கட்டிய கோட்டை உள்ளது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார். 



மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் 1933ல் இப்பாறை அருகே நடைபெற்றது.


இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது.




0 comments:

Post a Comment