Friday, 11 October 2013

சர்வதேச எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களுக்கு ஸ்பெஷல் செல்போன்!


“வெகு காலமாக சர்வ தேச கடல் எல்லையை தமிழ்க் மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவிகள் செல்போனில் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.”என்று நம்பிக்கை தெரிவிக்கின்ற்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள்.


11 - TEC FISH MOBIL

 


இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சர்வதேச கடல் எல்லையில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும், பின்னர் தமிழகத்தில் இருந்து அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு அவர்களை விடுவிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.


இந்தப் பிரச்சினைக்கு அறிவியல்பூர்வமான முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஆய்வுகளை, எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள் எஸ்.வேல்விழி, ஸ்ரீநாத், டி.சுவிதா ஆகியோர் கொண்ட குழு மேற்கொண்டது. தற்போது செல்போன் மூலம் தகவல் பறிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை இந்தக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.


இதுகுறித்து கேட்டபோது வேல்விழி, ஸ்ரீநாத், சுவிதா ஆகியோர்,”மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். மீனவர்களுக்கு தேவையான தகவல் செல்லும் கிராம அறிவு மையம் என்ற திட்டம் 1998-ம் ஆண்டில் புதுச்சேரியில் தொடங்கினோம்.


மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “இன்கோர்ஸ்” என்ற நிறுவனத்திடம் இருந்து, கடல் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்போம். மீன் அதிகம் கிடைக்கும் பகுதி, காற்றின் வேகம், அலையின் உயரம், வானிலை ஆகியவை உட்பட்ட தகவல்கள் அதில் இருக்கும்.


தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், அந்தந்த மீன்பிடி பகுதிகளில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ற தகவல்களை கொடுத்து வந்தோம். பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் உலக இடம் நிர்ணயக் கருவி (ஜி.பி.எஸ்.) பொருத்தப்பட்ட படகுகளுக்கு, தகவல்களை தமிழில் மொழி பெயர்த்து அனுப்பினோம்.


இந்த தகவல் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து மீனவர்களிடம் பரவலாக கருத்துகளைக் கேட்டு பெற்றோம். அவர்கள் கூறிய அம்சங்களையும் தொழில்நுட்பம் மூலமாக தகவல் பரிமாற்றத்தில் புகுத்தினோம்.
இதற்காக டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், குவால் காம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை இணைந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பப்படி, மீனவ நண்பன் கைபேசி- முதல் பாகம் என்ற திட்டத்தைத் தொடங்கினோம். இதில், டாடா போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் எழுத்துத் தகவல்கள், குரல் தகவல்கள் கிடைக்கும் நிலை இருந்தது.


எனவே அனைத்து மீனவர்களும் பயன்பெறும் வகையில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின்படி, அதன் இரண்டாம் பாகம் என்ற திட்டத்தைத் டாடா கன்சல்டன்சி, குவால் காம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை இணைந்து தயார் செய்து வருகிறோம்.


இதன்படி, ஆண்ட்ராய்ட் 4.0 என்ற ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் 3ஜி இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட செல்போன்களில், நாங்கள் கொடுக்கும் அனைத்துத் தகவல்களையும் மீனவர்கள் பெற வகை செய்யப்பட்டுள்ளது.


அந்த செல்போன்களில் மீனவர்களுக்கான தனி “ஐ.கான்” கொடுக்கப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்தால் அதிக மீன் பிடிக்க வாய்ப்புள்ள பகுதி, ஜி.பி.எஸ்., கடல்நிலை முன்னறிவிப்பு, வானிலை முன்னறிவிப்பு, மீனவர்களுக்கான அரசுத் திட்டங்கள், மீன் சந்தை விலைத் தகவல்கள், உள்ளூர் செய்திகள், முக்கிய தொடர்பு எண்கள் ஆகியவை இருக்கும்.
அதில் தேவையானதை கிளிக் செய்து தகவல் பெறலாம். யார் யார் எந்தெந்த பகுதிகளில் மீன் பிடிக்கிறார்களோ, அந்தந்த கடலில் நிலவும் சூழ்நிலைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். கடல் வழியாக வேறு மாவட்டத்துக்கு சென்றுவிட்டால்கூட, அந்தப் பகுதியின் விவரங்களையும் அறிய முடியும்.


அதுமட்டுமல்லாமல், மீன்களைப் பிடித்து வெளியே கொண்டு வரும்போது, அந்தந்த வகை மீன்களின் விலையை கடலுக்குள் இருக்கும்போதே அறிந்து கொள்ளலாம்.


இதுதவிர இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையில் உள்ள அச்சரேகை, தீர்க்கரேகை ஆகியவற்றின் இருப்பிடத்தையும் பதிவு செய்து வைத்துள்ளோம். எனவே இந்த செல்போனை கொண்டு சென்றால், கடல் எல்லைக்கு 5 கி.மீ. தூரத்தில் வரும்போதே, செல்போன் அலறத் தொடங்கிவிடும். இதன் மூலம் கடல் எல்லையை காட்டித் தரப்பட்டுவிடும். அதற்கேற்ற தொழில்நுட்பத்தை அதில் புகுத்தி இருக்கிறோம்.


எனவே எல்லை குறித்த எச்சரிப்பை மீனவர்கள் அறிந்து அதற்கேற்றபடி செயல்படலாம். தற்போது ஒவ்வொரு பகுதியில் உள்ள 100 மீனவர்களுக்கு, 100 செல்போன்களை பரீட்சார்த்த முறையில் கொடுத்துள்ளோம். அவர்கள் அந்த செல்போன்களை பயன்படுத்திப் பார்த்து, மேலும் தகவல்களை சேர்க்கும்படி கேட்டுக்கொண்டால், அதையும் சேர்த்து தொழில்நுட்பத்தை முழுமையாக்குவோம்.


இந்தப் பணிகள் முடிவதற்கு 6 மாதங்கள் ஆகும். எனவே முழுமை அடைந்த பிறகு அந்த ஐ.கானை கூகுள் போன்ற இணையதளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்காக போட்டுவிடுவோம். எனவே நவீன வகை செல்போன் வைத்திருக்கும் அனைத்து மீனவர்களும் இந்த ஐ.கானை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.


கடல் எல்லையை மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், இதுபோன்ற கருவிகள் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.கடல் எல்லை என்பது, கண்ணினால் தெரியும் அளவுக்கு ஏற்படுத்தவில்லை. தெரியாமல் எல்லையைக் கடந்து செல்லும் மீனவர்களுக்கு உயிர்காக்கும் தோழனாக இந்த செல்போன் இயங்கும்.” என்று தெரிவித்தார்கள்.


Mobile phones distributed to fishermen

******************************* 


Small mechanised boat fishermen of a couple of coastal villages in the district will enjoy a few extended benefits of safe fishing — by getting forecast information about the rough sea, bad weather; they can access information about their exact location in the waters thereby avoiding any trespassing in to the international marine boundary line. Further, they will get to know the information about marketing techniques.

0 comments:

Post a Comment