Thursday, 10 October 2013

2020-க்கு பிறகு சாக்லேட் சாமான்யர்களுக்கு எட்டாத அரிபொருளாகி விடுமாக்கும்!


கொஞ்சுண்டு சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவில் சாப்பிடுவதால் போதைக்கு அடிமையானவர்களாக மாறவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அதிலும் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவதால் போதையில் தள்ளப்படுவர்களாம்! மேலும் அபின் போன்ற போதை மருந்து சாப்பிடுவர் போன்று அடிமையாக மாறி விடுவர்கள் என்று ஒரு அதிர்ச்சி தரும் தகவல் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்லியிருந்தனர்ர்.


10 - choclets.MINI

 

அதாவது இயற்கையாவே நம் மூளையினுள் என்கெப்லின் என்ற ரசாயன திரவம் உள்ளது. சாக்லேட் அதிகம் சாப்பிடும் போது என்கெப்லின் திரவம் இரு மடங்காக சுரக்கின்றது. எனவே மூளைக்கு செல்லும் உணர்வு நரம்புகளை பாதித்து செயலிழக்க செய்து போதையை உண்டாக்குகிறது.எனவே தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவது, அபின் போன்ற போதை பொருள் சாப்பிடுவதற்கு சமம் என்றுதான் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.


ஆனாலும் இப்போதும் குழந்தைகள் முதல் முதியவர் வரை சாக்லேட் என்ற மந்திர வார்த்தையை கேட்டவுடன் இளமுறுகலான அந்த பொன்னிறமும், மனதை சுண்டி இழுக்கும் அதன் மணமும், சுவையும் நாக்கில் நீரை சுரக்கச் செய்து விடுவதை யாரும் தடுக்க இயலாது.


என்வே கோக்கோ என்னும் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் அசல் சாக்லேட்களுக்கு உலகளாவிய அளவில் கடும் கிராக்கி உள்ளது. ஒருபுறம் சாக்லேட் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் மற்றொரு புறம், கோக்கோவை பயிரிடும் விளை நிலங்கள் நாளடைவில் குறுகிக்கெண்டே போகின்றன.கோக்கோவை பணப் பயிராக விளைவித்து வந்த விவசாயிகள் பலர் தற்போது அதிக லாபம் தரக்கூடிய ரப்பர் மரத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.


தரமான கோக்கோ விளைச்சலுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்க நாடுகளும் இனி கோக்கோவை பயிரிடுவதால் பெரிய லாபத்தை பார்க்க முடியாது என்று முடிவெடுத்து விட்டது. இந்நிலையில், தேர்வில் ‘பாஸ்’ ஆகிய செய்தியை சொல்ல, காதலை வெளிப்படுத்த என ஆண்-பெண் இருபாலருக்கும் அருமையான தூதுவனாக இருந்து வந்த சாக்லேட்டின் விலை தாறுமாறாக எகிறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 


அதுவும், முழுக்க முகுக்க பதப்படுத்திய கிரீமி சாக்லேட்களுக்கு பதிலாக, சிறிதளவு சாக்லேட் கலக்கப்பட்ட மொறுமொறுப்பான ‘வேஃபர்’ வகைகள் தான் சந்தையில் கிடைக்கும்.ஆக -2020-க்கு பிறகு தூய சாக்லேட் என்பது சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாத அரிபொருளாகி விடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்..


0 comments:

Post a Comment