Saturday, 21 September 2013

ஐ.நா.- இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்! மன்மோகன் சிங் வலியுறுத்தல்!



ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த உள்ளார். 


நியூயார்க்கில் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வரும் 28ம் தேதி உரையாற்ற உள்ளார். அப்போது  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வேண்டுமென்ற கோரிக்கையை அவர் முன்வைப்பார் என்று வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி, அதில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்று ஐநா பொதுச்சபையில் பிரதமர் வலியுறுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். 


செப்டம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரதமர் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரும் 27ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுஜாதா சிங் கூறியுள்ளார். அப்போது ஆசியா கண்டத்தில் பலம்மிக்க நாடான இந்தியாவை ஜநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க மன்மோகன்சிங் வலியுறுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 




ஜநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன. ஜநா கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


இந்தியாவால் தேடப்படும் ஹபீஸ் சையது உள்ளிட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் எந்தவித தடையுமின்றி நடமாடி வருகின்றனர். இந்தியா கோரியபடி பாகிஸ்தான் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நவாஸ் ஷெரிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment